இந்தியா போர் தொடுத்தால்.., பாகிஸ்தான் ராணுவ கமாண்டோக்கள் சொன்னது என்ன ?

30


இஸ்லாமாபாத்: இந்தியா போர் தொடுத்தால் தக்க பதிலடி கொடுப்போம் என வெள்ளிக்கிழமை இரவில் நடந்த பாகிஸ்தான் ராணுவ சிறப்பு உயர்மட்டக்குழு கூட்டத்தில் ராணுவ உயர் கமாண்டோக்கள் தெரிவித்ததாக ரகசிய தகவல் வெளியாகி இருக்கிறது.


காஷ்மீர் தாக்குதலுக்கு பின்னர் இரு நாடுகள் இடையே பதட்டம் நிலவி வருகிறது. இந்நிலையில் எல்லையில் இரு தரப்பு படைகளும் உஷார் நிலையில் உள்ளன. கடந்த சில நாட்களுக்கு முன் பிரதமர் மோடி தலைமையில் பாதுகாப்பு கவுன்சில் கூட்டம் நடந்தது. ராணுவ தளபதிகளும், உள்துறை அமைச்சரும் பிரதமருடன் முக்கிய ஆலோசனை நடத்தினர்.


ராணுவ உயர்மட்டக்குழு





இந்நிலையில் பாகிஸ்தான் ராணுவ தளபதி சையது ஆசீம் முனீர் தலைமையில் சிறப்பு கமாண்டர் குழு கூட்டம் நடந்தது. கூட்டத்தில் பங்கேற்ற ராணுவ உயர் அதிகாரிகள் இந்தியாவின் குற்றச்சாட்டுகளுக்கு கவலை தெரிவித்ததுடன் எதையும் எதிர்கொள்ள தயார் என்றும் தளபதியிடம் உறுதி அளித்துள்ளனர். " இந்தியாவின் எந்தவொரு முயற்சியும் உறுதியுடனும் தெளிவுடனும் எதிர்கொள்ளப்பட்டு தோற்கடிக்கப்படும்"

மேலும் இந்தியா பாகிஸ்தான் மீது போர் தொடுத்தால் எந்தவொரு சவாலையும் பாகிஸ்தான் ராணுவம் எதிர்கொள்ளும், தக்க பதிலடி கொடுக்ப்படும் என்றும் தெரிவித்துள்ளனர். அதே நேரத்தில் பாகிஸ்தான் இறையாண்மைக்கும் வளர்ச்சிக்கும் எவ்வித பாதிப்பும் இல்லாமல் பார்த்து கொள்வோம் என்றும் உறுதி அளித்தனர்.

Advertisement