ஜல்லிக்கட்டில் பங்கேற்ற காளைகள் உயிரிழப்பு

புதுக்கோட்டை:ஆலங்குடி அருகே கல்லாலங்குடியில் நடைபெற்ற ஜல்லிக்கட்டில் பங்கேற்ற இரண்டு காளைகள் இறந்தன.

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே கல்லாலங்குடி முத்துமாரியம்மன் கோவில் தேர் திருவிழாவை முன்னிட்டு நேற்று நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில், வாடிவாசலில் அவிழ்த்துவிடப்பட்ட மேலாத்துார் பகுதியை சேர்ந்த தேவாராஜேந்திரன் என்பவருடைய காளை பள்ளத்திவிடுதி பகுதியில் உள்ள 20 அடி ஆழமுள்ள கிணற்றில் தவறி விழுந்து பரிதாபமாக உயிரிழந்தது.

இதேபோல், வாடிவாசலில் அவிழ்த்துவிடப்பட்ட திருச்சி ஏர்போர்ட் சிவா என்பவருக்கு சொந்தமான காளை ஒன்று அருகே உள்ள கருவேல மரத்தில் சிக்கிக்கொண்டதில் காளையின் கழுத்தில் இருந்த கயிறு காளையின் கழுத்தை இறுக்கி பரிதாபமாக உயிரிழந்தது.

இரண்டு காளைகள் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Advertisement