ராசிபுரம் பஸ் ஸ்டாண்ட் இடமாற்றத்தில்முறைகேடு என மீட்புக்குழு கருத்து பதிவு



ராசிபுரம்:ராசிபுரத்தில் தற்போது செயல்பட்டு வரும் புதிய பஸ் ஸ்டாண்டிலிருந்து பல்வேறு மாவட்டங்களுக்கு நுாற்றுக்கணக்கான பஸ்கள் இயக்கப்படுகின்றன. முகூர்த்த நாட்கள், அலுவலக நேரம், விழாக்காலங்களில், ராசிபுரம் நகர் பகுதியில் போக்குவரத்து நெரிசல் அதிகரிக்கிறது. இதனால், புறநகர் பகுதியில் பஸ் ஸ்டாண்ட் அமைக்க நகராட்சி சார்பில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பஸ் ஸ்டாண்ட் அமைக்க, தனியார் நிறுவனம் வழங்கிய கட்டுமான பணிகளும் தொடர்ந்து நடந்து வருகின்றன.
இந்நிலையில், பஸ் ஸ்டாண்ட் மாற்றத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, ராசிபுரம் பஸ் ஸ்டாண்ட் மீட்புக்குழுவினர் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டனர். அதுமட்டுமின்றி, சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கில், 'மாவட்ட கலெக்டர், பஸ் ஸ்டாண்ட் மாற்றம் குறித்து பொதுமக்களிடம் கருத்துகேட்டு, பொது அறிவிப்பு வெளியிட வேண்டும்' என, உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து, நேற்று ராசிபுரம் பஸ் ஸ்டாண்ட் மீட்புக்குழுவினரிடம், கருத்து கேட்கும் நிகழ்ச்சி நடந்தது. அப்போது, மீட்புக்குழுவின் நிர்வாகிகள் பாலசுப்ரமணியம், ஜோதிபாசு ஆகியோர் கூறியதாவது:

தற்போது செயல்படும் பஸ் ஸ்டாண்ட் போது


மானதாக உள்ளது. இதை மாற்றுவது தனிப்பட்ட நபரின் நோக்கமாக உள்ளது. பஸ் ஸ்டாண்ட் மாற்றத்திற்கு ஆலோசனை கூட்டம் நடந்த அன்றே, தனியார் நிறுவனம் நிலத்தை பத்திரப்பதிவு செய்துள்ளது. மேலும், மாநிலங்களவை தேர்தல் நடந்தபோது நிலம் தானம் பெற்றுக்கொள்ள ஆணையாளருக்கு எழுதிய கடிதத்திலும் மோசடி நடந்துள்ளது. இதில் முறைகேடு நடந்துள்ளது. மனு தாக்கல் செய்த அனைத்து நபர்கள், பொதுமக்களை சந்தித்து, கலெக்டர் கருத்து கேட்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement