பாக்., பயங்கரவாத முகாம்களைத் தாக்க இந்தியா பயன்படுத்திய ஆயுதங்கள் இதுதான்!

11

புதுடில்லி: பாகிஸ்தான் பயங்கரவாத முகாம்களை தாக்க இந்திய ராணுவம் ரபேல் ஜெட் விமானங்கள், ஸ்கால்ப் ஏவுகணைகள், ஹேமர் குண்டுகள் பயன்படுத்தப்பட்டு உள்ளன.


பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக, பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் உள்ள 9 பயங்கரவாத முகாம்கள் மீது இந்திய ராணுவம் 'ஆபரேசன் சிந்தூர்' என்ற பெயரில் தாக்குதலை நடத்தியுள்ளது. இதற்கு ரபேல் ஜெட் விமானங்கள், ஸ்கால்ப் ஏவுகணைகள், ஹேமர் குண்டுகள் இந்திய ராணுவம் பயன்படுத்தி உள்ளது.


இந்திய கடற்படையின் ஆதரவுடன் இந்த தாக்குதலை இந்திய ராணுவம் வெற்றிகரமாக நடத்தி உள்ளது. குறிப்பாக பாகிஸ்தான் பயங்கரவாத முகாம்களை கடல்வழி மற்றும் வான்வழியாக தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளது.




ஸ்கால்ப் ஏவுகணைகள் 250 கிலோ மீட்டருக்கும் அதிகமான தூரம் சென்று துல்லியமாக தாக்குதல் நடத்தும் திறன் கொண்டது. இந்த ஏவுகணை வான்வழி தாக்குதல் நடத்த பயன்படுத்தப்படும் முக்கியமான ஒன்றாகும்.


ஹேமர் குண்டுகள் லஷ்கர் இ தொய்பா பயங்கரவாத அமைப்பு மற்றும் ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பின் தலைமையகம் உள்ளிட்ட இடங்களில் தாக்குதல் நடத்த பயன்படுத்தப்பட்டு உள்ளது. ஹேமர் குண்டுகளை பிரான்ஸில் இருந்து இந்தியா வாங்கியது.


ஹேமர் குண்டு என்பது துல்லியமாக தாக்கும் திறன் கொண்டது. 50 முதல் 70 கிலோமீட்டர் வரை இலக்குகளைத் தாக்கும் திறன் கொண்டது. முக்கிய இடங்கள் அடையாளம் காணப்பட்டு தாக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement