சீல், அட்டோ 3 கார்கள் புதுப்பிப்பு

'பி.ஒய்.டி.,' நிறுவனம், அதன் 'அட்டோ 3' எஸ்.யூ.வி., 'சீல்' செடான் ஆகிய மின்சார கார்களை மேம்படுத்தி அறிமுகம் செய்துள்ளது. இரு கார்களில் உள்ள, 'லெட் ஆசிட்' பேட்டரிக்கு பதிலாக 'லித்தியம் அயான் பாஸ்பேட்' பேட்டரி வழங்கப்பட்டுள்ளது.

இதன் உயர்ந்த 'பெர்பார்மென்ஸ்' மாடல் காருக்கு மட்டும், இந்நிறுவனத்தின் விசேஷ 'டிஸ்கஸ் - சி' சஸ்பென்ஷன் வழங்கப்பட்டுள்ளது. கரடுமுரடான சாலைகளில், மென்மையாகவும், வளைவுகளில் கார் கட்டுப் பாட்டை அதிகரிக்க, இறுக்கமாகவும் மாறும் தன்மை இந்த சஸ்பென்ஷனுக்கு உண்டு.

மேம்படுத்தப்பட்ட ஏசி மற்றும் காற்று சுத்திகரிப்பு அமைப்பு, வயர்லெஸ் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்பிளே, வெயில் சூட்டில் இருந்து கேபினை பாதுகாக்க 'பவர்டு சன்ஷேட்' வசதி, ஆகியவை புதிதாக வழங்கப்படும் அம்சங்கள். இந்த காரின் விலை, 41 லட்சம் ரூபாய் முதல் துவங்குகிறது. நடுரக மற்றும் உயர்ந்த மாடல் கார்களின் விலை மட்டும், 15,000 ரூபாய் அதிகரிக்கப்பட்டுள்ளது.

அட்டோ - 3


கரு நிற உட்புறம், முன்புற வெண்ட்டிலேட்டட் சீட்டுகள் ஆகிய அம்சங்கள் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளன. இந்த காரின் விலை, 24.99 லட்சம் ரூபாய் முதல் துவங்குகிறது.


டீலர்: KUN BYD - 91766 58999

Advertisement