சாலையில் ஓடிய கழிவு நீர் பொதுமக்கள் கடும் அவதி

கரூர்:
கரூரில், சாக்கடை வாய்க்காலில் இருந்து கழிவுநீர் வெளியேறி சாலையில் ஓடியதால், பொதுமக்கள் அவதிப்பட்டனர்.
கரூர் - கோவை சாலையில், மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் உள்ளது. மேலும், அந்த பகுதியில் ஓட்டல்கள், மருத்துவமனைகள், வணிக நிறுவனங்கள் மற்றும் வீடுகள் உள்ளன.
இந்நிலையில், பல நாட்களாக மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் எதிரே, சாக்கடை கால்வாயில் இருந்து கழிவுநீர் வெளியேறி, சாலையில் ஓடியது. இதுகுறித்து, அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள், மாநகராட்சி அலுவலகத்துக்கு புகார் தெரிவித்தும் சரி செய்யப்படவில்லை.
கோவை சாலையில் உள்ள, சாக்கடை வாய்க்கால்கள் பல மாதங்களாக சுத்தம் செய்யப்படவில்லை. அதில், ஏற்பட்டுள்ள அடைப்பு காரணமாக கழிவுநீர் சாலையில் ஓடும் அவலநிலை உள்ளது. கரூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில், கோடை மழை பெய்ய தொடங்கிய நிலையில், கழிவு நீர் வெளியேறுவதை தடுக்க, கோவை சாலையில் உள்ள, சாக்கடை கால்வாய்களை துார்வாரி சுத்தப்படுத்த, மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுப்பது அவசியம்.


Advertisement