மரம் சாய்ந்து மின்கம்பங்கள் சேதம் 2 நாள் மின் வினியோகம் பாதிப்பு

மேட்டூர், மே 4
மேட்டூர், ராமன் நகர், சாம்பள்ளி, குஞ்சாண்டியூர் பகுதிகளில் நேற்று முன்தினம் மதியம் சூறைக்காற்று
டன் மழை பெய்தது. அதேநேரம் மேட்டூர் - பவானி நெடுஞ்சாலையோரம், நவப்பட்டி ஊராட்சி
யில் பலத்த காற்று வீசியது. அந்த நேரம், நாட்டாமங்கலத்தில் பவானி நெடுஞ்சாலையோரம் இருந்த புளியமரம் வேரோடு சாய்ந்து, அருகிலுள்ள வெல்டிங் பட்டறையில் விழுந்தது. இதில் அங்கிருந்த ஒரு மின்கம்பம், அருகே உள்ள மற்றொரு மின்கம்பம் என இரு கம்பங்கள் முறிந்து ஒயர்கள் அறுந்ததால், அப்பகுதியில் மின்தடை ஏற்பட்டது.
வெல்டிங் பட்டறை
யில் வேலை செய்த வெங்கடேஷ், 42, அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். நேற்று மதியம் நெடுஞ்சாலைத்துறை சார்பில் மரத்தை வெட்டி அகற்றும் பணி நடந்தது. அதே நேரம், மின் கழகம் சார்பில் முறிந்த கம்பங்களை அகற்றி புது கம்பம் நட்டு ஒயர் பொருத்தும் பணி நடந்தது. இதனால் நாட்டாமங்கலத்தில் சில இடங்களில் மட்டும் நேற்று முன்தினம், நேற்று என, இரு நாட்கள் மின் வினியோகம் பாதிக்கப்பட்டது.

Advertisement