தஞ்சை பெரிய கோவிலில் சித்திரை திருவிழா தேரோட்டம் கோலாகலம்: ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு

1

தஞ்சாவூர்: உலகப் புகழ்பெற்ற, தஞ்சாவூர் பெரியகோவிலில் முக்கிய திருவிழாக்களில் சித்திரை பெருவிழாவும் ஒன்று. இவ்விழா ஆண்டுதோறும் 18 நாட்கள் வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்தாண்டுக்கான திருவிழா கடந்த ஏப்.23ம் தேதி, கொடியேற்றத்துடன் துவங்கியது.


விழாவின் முக்கிய நிகழ்வான திருத்தேரோட்டம் இன்று நடைபெற்றது. 3 அடுக்குகள் கொண்டதும், 52 அடி உயரம் கொண்டதுமான இந்த தேர் 40 டன் எடை கொண்டது. தேரோட்டத்தை முன்னிட்டு இன்று அதிகாலை பெரியகோவிலில் இருந்து ஸ்ரீதியாகராஜர், கமலாம்பாள் உற்சவர்கள் கொண்டு வரப்பட்டு இத்திருதேரில் எழுந்தருளினர்.


பிறகு பக்தர்களால் தியாகராஜா என்ற முழக்கத்துடன் தேர் வடம் பிடித்து இழுக்கப்பட்டது.
தேருக்கு முன் பெண்கள் கோலாட்டம், தப்பாட்டம் ஆடிச் சென்றனர். சிவ வாத்தியங்கள் முழங்கப்பட்டன. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பக்தர்களின் வசதிக்காகப் பல்வேறு இடங்களிலும் தன்னார்வலர்கள் தண்ணீர் மற்றும் நீர் மோர் பந்தல்கள் அமைத்து இருந்தனர். அன்னதானமும் நடைபெற்றது.

Advertisement