திரவுபதியம்மன் கோவிலில் விளக்கு பூஜை

திருத்தணி:திருத்தணி பழைய தர்மராஜாகோவில் தெருவில் உள்ள திரவுபதியம்மன் கோவிலில், தீமிதி விழா நடந்து வருகிறது. நேற்று முன்தினம் இரவு கோவில் வளாகத்தில், உற்சவர் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினார்.

பின், 108 பெண்கள் பங்கேற்று, அம்மனுக்கு விளக்கு பூஜை நடத்தி வழிபட்டனர். தொடர்ந்து, உற்சவர் அம்மன் புஷ்ப பல்லக்கில் எழுந்தருளி, திருத்தணி நகரம் முழுதும் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். வரும் 11ம் தேதி காலை துரியோதனன் படுகளம் மற்றும் மாலை தீமிதி விழா நடை பெறுகிறது.

Advertisement