அலங்கரிக்கப்பட்ட சப்பரங்களில் 63 நாயன்மார்கள் திருவீதி உலா


சேலம்,சேலம் சுகவனேஸ்வரர் கோவிலில், திருவெம்பாவை பெருவிழா கழகம் சார்பில், 22ம் ஆண்டாக, அறுபத்து மூவர் திருவிழா நேற்று முன்தினம், திருமுறை, திருப்புகழ் இன்னிசை கச்சேரியுடன் தொடங்கியது.
நேற்று காலை, கோவில் வளாகத்தில் உள்ள, 63 நாயன்மார் மூலவர் கற்
சிலைகள், 63 உற்சவர் பஞ்சலோக திருமேனிகளுக்கு, பால், தயிர், இளநீர், சந்தனம் உள்பட, 16 வகை பொருட்களால் அபி
ேஷகம், அலங்காரம் செய்து பூஜை நடத்தப்பட்டது.
இதில் சேலம் ராம
கிருஷ்ணா மிஷன் ஆசிரமத்தில் இருந்து, கீதார்த்தானந்தா மஹராஜ் சுவாமிகள், 'அறுபத்து மூவர் பெருமை' தலைப்பில் பேசினார்.
மாலை, கோவில் தலைமை ஸ்தானீகர் தங்க பிரசன்னகுமார், சேலம் ராமகிருஷ்ணா மிஷன் ஆசிரம செயலர் யதாத்மானந்த மஹராஜ் முன்னிலையில், மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட சப்பரங்களில், 63 நாயன்மார்கள் திருவீதி உலா, கோவிலில் தொடங்கி, நகரின் முக்கிய வீதிகள் வழியே சென்று மீண்டும் கோவிலை அடைந்தது. விழா நிறைவாக, வரும், 14 இரவு, சுகவனேஸ்வரர் கோவிலில் தங்க ரதம் இழுக்கப்படும்.
சிங்க வாகனம்
சங்ககிரி சென்ன கேசவப்பெருமாள் கோவில் சித்திரை தேர் திருவிழா நேற்று முன்தினம் கொடியேற்றத்துடன் தொடங்கியது. 2ம் நாளான நேற்று இரவு, சிங்க வாகனத்தில் சென்ன கேசவ பெருமாள், சங்ககிரி நகரில் திருவீதி உலாவாக அழைத்து வரப்பட்டார். திரளான பக்தர்கள் வழிபட்டனர்.

Advertisement