மாணவிக்கு பாராட்டு

புவனகிரி : டி.என்.பி.எஸ்.சி., குரூப் 1 தேர்வில் முதலிடம் பிடித்த மாணவியை, புவனகிரி ஊழல் எதிர்ப்பு இயக்கத்தினர் பாராட்டினர்.

கீரப்பாளையம் அடுத்த வாழைக்கொல்லை கிராமத் தைச் சேர்ந்த கதிர்ச்செல்வி, டி.என்.பி.எஸ்.சி., குருப்-1 தேர்வில் மாநில அளவில் முதலிடம் பிடித்தார். இவருக்கு புவனகிரி ஊழல் எதிர்ப்பு இயக்கத் தலைவர் குணசேகரன் தலைமையில், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் செந்தில்குமார், மணிமாறன், சுந்தரமூர்த்தி, கிளை செயற்குழு உறுப்பினர் அன்பழகன் ஆகியோர் நினைவுப் பரிசு வழங்கி பாராட்டினர்.

Advertisement