பஹல்காமில் சுற்றுலா பயணிகள் கொண்டாட்டம்; ராணுவத்திற்கு பாராட்டு

5


ஸ்ரீநகர்: பயங்கரவாதத்திற்கு எதிரான 'ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கைக்கு ஆதரவாக பஹல்காமில் உள்ள சுற்றுலாப் பயணிகள் கொண்டாடி மகிழ்ந்தனர்.


காஷ்மீரின் பஹல்காமில் இருந்து 5 கி.மீ., தூரத்தில் அமைந்துள்ளது பைசரன் பள்ளத்தாக்கு பகுதி. இது சுற்றுலா பயணிகளால் விரும்பப்படும் பகுதியாக அமைந்துள்ளது. இங்கு ஏப்ரல் 22ம் தேதி பாகிஸ்தான் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் அப்பாவி சுற்றுலா பயணிகள் 26 பேர் கொல்லப்பட்டனர்.

தினமும் 5 ஆயிரம் முதல் 7 ஆயிரம் வரை நிறைந்து காணப்பட்ட இப்பகுதி தற்போது வெறிச்சோடி காணப்பட்டது. தற்போது வெறிச்சோடி காணப்பட்ட காஷ்மீரின் பஹல்காம் பகுதிக்கு மீண்டும் சுற்றுலா பயணிகள் வரத்துவங்கி உள்ளனர்.



இந்த சூழலில், பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் மற்றும் பாகிஸ்தானில் 9 பயங்கரவாத முகாம்கள் மீது இந்திய ராணுவம் ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் தாக்குதலை நடத்தி உள்ளது. இதனை காஷ்மீர் மக்கள் கொண்டாடி மகிழ்ந்தனர்.


அதேபோல், 'ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கைக்கு ஆதரவாக பஹல்காமில் உள்ள சுற்றுலாப் பயணிகள் கொண்டாடி மகிழ்ந்தனர். அவர்கள் '' ஜெய் ஹிந்த், பாரத் மாதா கீ ஜெய்' என்ற கோஷங்களை எழுப்பினர். இந்திய ராணுவ வீரர்களுக்கு பாராட்டுகள் தெரிவித்தனர்.

Advertisement