பிரதமர் மோடியின் 3 நாடுகள் பயணம் ஒத்திவைப்பு

புதுடில்லி: வரும் மே 13 ஆம் தேதி முதல் 17 தேதி வரை நார்வே, குரோஷியா மற்றும் நெதர்லாந்து ஆகிய 3 ஐரோப்பிய நாடுகளுக்கு செல்ல இருந்த பயணத்தை பிரதமர் மோடி ஒத்தி வைத்துள்ளார்.
காஷ்மீரில் பஹல்காம் பகுதியில் பாக்., பயங்கரவாதிகள் நடத்திய தாக்குலில் 26 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். அந்த சம்பவத்துக்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஆபரேஷன் சிந்துார் என்ற பெயரில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் செயல்பட்டு வந்த 9 பயங்கரவாத முகாம்கள் மீது இந்திய ராணுவம் நேற்று நள்ளிரவு அதிரடி தாக்குதல் நடத்தியது.
இதில், பயங்கரவாத முகாம்கள் அழிக்கப்பட்டன. பயங்கரவாதி மசூத் அசாரின் உறவினர்கள் உட்பட பலர் கொல்லப்பட்டுள்ளனர். இதனால் இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் பதற்றமான சூழல் நிலவுகிறது.
இந்த பாதுகாப்பு நடவடிக்கையின் காரணமாக, நார்வே, குரோஷியா மற்றும் நெதர்லாந்து ஆகிய 3 ஐரோப்பிய நாடுகளுக்கு பிரதமர் மோடி செல்வதாக இருந்த பயணம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.


மேலும்
-
ஹனுமன் வழியில் தாக்குதல் -ராஜ்நாத் சிங் பெருமிதம்
-
மனித - விலங்கு மோதலை தடுக்க ஏ.ஐ., உதவியுடன் திட்டம்: கூடலுாரில் வனத்துறை அமல்
-
சென்னை - பெங்களூரு, ஹைதராபாத் 160 கி.மீ., வேகத்தில் ரயில் இயக்கம்
-
கலைக்கல்லுாரி பட்டமளிப்பு விழா
-
இடுக்கியில் தெரு நாய்கள் அதிகரிப்பு 4 மாதங்களில் 2525 பேர் பாதிப்பு
-
ஆவின் பாலகங்களில் மோர் தட்டுப்பாடு வரவேற்பு இருந்தும் கிடைக்காத அவலம்