எல்லையில் பதட்டம்: துணை ராணுவத்தினருக்கு விடுமுறை ரத்து

1


புதுடில்லி: விடுப்பில் இருக்கும் துணை ராணுவப்படையினர் அனைவரும் உடனடியாக பணிக்குத் திரும்ப வேண்டும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அறிவித்துள்ளார்.


காஷ்மீரில் பஹல்காம் பகுதியில் பாக்., பயங்கரவாதிகள் நடத்திய தாக்குலில் 26 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்த சம்பவம் இந்தியாவை கடும் கோபத்தில் ஆழ்த்தியது. இதனையடுத்து பாகிஸ்தான் மீது மத்திய அரசு கடும் நடவடிக்கைகளை எடுத்தது.


இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் செயல்பட்டு வந்த 9 பயங்கரவாத முகாம்கள் மீது இந்திய ராணுவம் அதிரடியாக தாக்குதல் நடத்தியது. இதனால் இந்தியா- பாகிஸ்தான் எல்லையில் பதற்றமான சூழல் நிலவுகிறது.



இந்நிலையில், விடுமுறையில் இருக்கும் ராணுவ வீரர்கள் உடனடியாக பணிக்கு திரும்ப வேண்டும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உத்தரவிட்டுள்ளார். பாகிஸ்தான் எல்லையில் பதற்றம் அதிகரித்து வரும் நிலையில் மத்திய அரசின் இந்த உத்தரவு தயார் நிலையில் இருப்பதை குறிக்கிறது.

Advertisement