டிராவல்ஸ் உரிமையாளர் கொலை; துபாய் தப்பிய கோவை பெண் கைது

சென்னை: துபாய் டிராவல்ஸ் உரிமையாளர் சிகாமணி, 47, என்பவர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் போலீசாரால் தேடப்பட்ட கோவையை சேர்ந்த சாரதா, 32, சென்னை விமான நிலையத்தில் நேற்று இரவு கைது செய்யப்பட்டார்.
துபாயில் டிராவல்ஸ் நடத்தி வந்த, திருவாரூரை சேர்ந்த சிகாமணி, 47, கோவையில் கொலை செய்யப்பட்டு, கரூரில் புதைக்கப்பட்டார். இது தொடர்பாக, கோவையை சேர்ந்த தியாகராஜன் கோர்ட்டில் சரணடைந்தார். தியாகராஜன், அவரது கள்ளக்காதலி கோமதி, கூலிப்படையை சேர்ந்த புதியவன், வேலைக்கார பெண் சுவாதி, கோமதியின் சகோதரி நீலா ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
துபாய் சென்ற சாரதா ஓரிரு நாட்களுக்கு முன் சென்னை வந்துள்ளார். அவர் வெளிநாடு தப்பி செல்லாமல் இருக்க, விமான நிலையங்களுக்கு போலீசார், 'லுக் அவுட்' நோட்டீஸ் அனுப்பியிருந்தனர். இந்நிலையில் நேற்று இரவு சாரதாவை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
மேலும்
-
சென்னை ஓட்டலில் மட்டன் குழம்பில் தவளை... வாடிக்கையாளர் அதிர்ச்சி
-
காஷ்மீரில் 700 அடி பள்ளத்தில் வாகனம் கவிழ்ந்தது; ராணுவ வீரர்கள் 3 பேர் உயிரிழப்பு
-
இந்தியாவில் பாக்., முன்னாள் பிரதமர் இம்ரான் கான் எக்ஸ் கணக்கு முடக்கம்
-
நீட் தேர்வு துவங்கியது; நாடு முழுவதும் 22 லட்சம் பேர் பங்கேற்பு
-
4 மாவட்டங்களில் 2 நாட்கள் கனமழைக்கு வாய்ப்பு; வானிலை மையம் தகவல்
-
பிரதமர் மோடியுடன் விமானப்படை தலைமை தளபதி சந்திப்பு!