நீட் தேர்வு துவங்கியது; நாடு முழுவதும் 22 லட்சம் பேர் பங்கேற்பு

3

சென்னை: நாடு முழுவதும் நீட் தேர்வு இன்று (மே 04) மதியம் 2 மணிக்கு துவங்கியது. தேர்வில் மொத்தம் 22 லட்சம் பேர் பங்கேற்றுள்ளனர்.


எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., உள்ளிட்ட இளநிலை மருத்துவ படிப்புகளில் சேருவதற்காக நீட் நுழைவுத் தேர்வை, தேசிய தேர்வு முகமை நடத்தி வருகிறது. நீட் நுழைவுத் தேர்வு இன்று (மே 4) நடைபெற்றது. மதியம் 2 மணிக்கு தேர்வு துவங்கி நடந்து வருகிறது.


மாலை 5.20 மணி வரை தேர்வு நடக்கிறது. நாடு முழுதும் 500க்கும் மேற்பட்ட நகரங்களில் உள்ள 5,453 மையங்களில் நீட் தேர்வு நடைபெற்று வருகிறது. நாடு முழுவதும் 22 லட்சம் பேர் பங்கேற்று உள்ளனர். தமிழகத்தில் ஒன்றரை லட்சம் பேரும் தேர்வில் பங்கேற்றுள்ளனர்.

சென்னையில் மட்டும் 44 மையங்களில் 21,960 பேர் தேர்வு எழுதி வருகின்றனர். முன்னதாக, நீட் நுழைவுத்தேர்வை எழுத வந்த மாணவியர் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். தேர்வு எழுத வந்த மாணவர்களை போலீசார் மெட்டல் டிடெக்டர் மூலம் சோதனை செய்தனர்.

Advertisement