காட்டெருமையை சுட்டுக்கொன்ற 2 பேர் சிக்கினர்

ஊட்டி: நீலகிரி மாவட்டம், ஊட்டி அருகே உள்ள கல்லக்கொரை பகுதியில், நேற்று முன்தினம் இரவு காட்டெருமை ஒன்று, சாலையில் இறந்து கிடந்தது. மக்கள் தகவலில், சம்பவ இடத்திற்கு நேற்று சென்ற வனத்துறையினர், இறந்த காட்டெருமையின் உடலை ஆய்வு செய்தபோது, துப்பாக்கி குண்டுகள் பாய்ந்து உயிரிழந்துஉள்ளது தெரிந்தது.

இதை தொடர்ந்து, மாவட்டத்தில் உள்ள அனைத்து சோதனை சாவடிக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டு வனத்துறையினர் கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

அப்போது, கூடலுார் சாலையில் நடுவட்டம் பகுதியில் கேரள வாகனத்தை சோதனை செய்து, கேரள மாநிலம், நிலம்பூரை சேர்ந்த, அனீஸ் மோன், 43, நிஷார், 45, ஆகிய இருவரை கைது செய்தனர்.

Advertisement