கஞ்சா போதை மகனை அடித்து கொன்ற தந்தை

திருப்பத்துார்: திருப்பத்துார் அருகே, கஞ்சா பழக்கத்திற்கு அடிமையான மகனை, தந்தையே அடித்து கொலை செய்தார்.

திருப்பத்துார் மாவட்டம், வாணியம்பாடி, ஜீவா நகரை சேர்ந்தவர் முருகேசன், 54, பஞ்சர் கடை வைத்துள்ளார். இவரின் மகன் ஸ்ரீதர், 27, கஞ்சா புகைக்கும் பழக்கத்திற்கு அடிமையாகி, வேலைக்கு செல்லாமல், நண்பர்களுடன் சுற்றி திரிந்தார்.

இந்நிலையில், நேற்று தந்தை, மகன் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.

ஆத்திரமடைந்த முருகேசன், சாம்பார் கரண்டியால் ஸ்ரீதரை தாக்கியதில் அவர் பலியானார். மகனை கொலை செய்த தந்தையை, வாணியம்பாடி டவுன் போலீசார் கைது செய்தனர்.

Advertisement