போலீஸ்காரருக்கு மிரட்டல் முன்னாள் ராணுவ வீரர் கைது

சிவகங்கை: சிவகங்கைமாவட்டம் காளையார்கோவிலில் போலீஸ்காரருக்கு கொலை மிரட்டல் விடுத்த முன்னாள் ராணுவ வீரர் கைது செய்யப்பட்டார்.

காளையார்கோவில் அருகே கோடிக்கரை ஜெயராமன் மகன் பிரபு 41. முன்னாள் ராணுவ வீரர் இவர் தச்சன்கண்மாய் டாஸ்மாக் பாரில் தகராறு செய்வதாக போலீசாருக்கு தெரிவித்தனர்.

அங்கு சிறப்பு எஸ்.ஐ., கதிரேசன் தலைமையில் போலீஸ்காரர்கள் சுதாகர், ராஜ்குமார் சென்றனர்.

மதுபோதையில் இருந்த பிரபு, போலீஸ்காரர் சுதாகரை அசிங்கமாக பேசி, சட்டையை பிடித்து இழுத்து பிரச்னை செய்து, கொலை மிரட்டல் விடுத்தார்.

காளையார்கோவில் போலீசார் அவரை கைது செய்தனர்.

Advertisement