பெங்களூரு - மதுரை வந்தே பாரத் ரயிலில் 'பவர் கட்' பயணிகள் அவதி
விருதுநகர்: பெங்களூரு கன்டோன்மென்ட் -- மதுரை வந்தே பாரத் ரயிலில் மின்சாரம் தடைபட்டதால் நடுவழியில் நின்றது. இதனால் கதவுகளை திறக்க முடியாமல் பயணிகள் அவதிக்குள்ளாகினர்.
மதுரை -- பெங்களூரு கன்ட்டோன்மென்ட் -- மதுரை இடையே திருச்சி வழியாக தினமும் வந்தே பாரத் ரயில் இயக்கப்படுகிறது.
நேற்று மதியம் 1:30 மணிக்கு பெங்களூரு கன்டோன்மென்ட்டில் இருந்து புறப்பட்ட ரயில் (20672) இரவு 7:10 மணிக்கு திருச்சியை நெருங்கிய போது மின்சாரம் தடைபட்டு நடுவழியில் நின்றது.
இதனால் கதவுகளை திறக்க முடியாமல் இருளால் பயணிகள் அவதிக்குள்ளாகினர். சிலருக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டது.
ரயில்வே ஊழியர்கள் திருச்சி ஸ்டேஷனில் இருந்து சென்று முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பெட்டிகளின் கதவுகளை திறந்தனர். மழைப் பொழிவால் பிரச்னையை சரிசெய்வதில் சுணக்கம் ஏற்பட்டது. இதனால் ஒன்றரை மணிநேரம் நடுவழியில் நின்றது. பின்னர் சரிசெய்யப்பட்டு இரவு 8:50 மணிக்கு திருச்சி வந்தது. அங்கிருந்து இரவு 8:55 மணிக்கு மதுரை புறப்பட்டது.
நேற்று முன்தினம் எழும்பூர் -- நாகர்கோவில் -- எழும்பூர் வந்தே பாரத் ரயில் தொழில்நுட்பக் கோளாறால் 3:00 மணி நேரம் தாமதமாக பயணித்தது குறிப்பிடத்தக்கது.
மேலும்
-
வாரத் துவக்கத்தில் தங்கம் விலை சற்று உயர்வு; ஒரு சவரன் ரூ.70,200!
-
வெறிநாய் கடித்து சிறுமி உயிரிழப்பு; தடுப்பூசி போட்டும் பயனில்லை; ஒரே மாதத்தில் 3வது சம்பவம்
-
தே.ஜ., கூட்டணியிலேயே நீடிப்பேன்; மீண்டும் மீண்டும் சொல்கிறார் நிதீஷ் குமார்
-
அக்னி நட்சத்திரம் முதல் நாளில் அதிக மழைப்பொழிவு எங்கே?
-
கோவில் திருவிழாவில் நடனமாடுவதில் தகராறு; கத்தியால் குத்தி சிறுவன் கொலை
-
பிரபல நடிகர் அஜாஸ் கான் மீது பாலியல் வன்கொடுமை வழக்குப்பதிவு