ஈஸ்வரி இன்ஜி., கல்லுாரி 25வது பட்டமளிப்பு விழா

சென்னை: எஸ்.ஆர்.எம்., ஈஸ்வரி இன்ஜினியரிங் கல்லுாரியின், 25வது ஆண்டு பட்டமளிப்பு விழா, ராமாபுரத்தில் நேற்று நடந்தது. எஸ்.ஆர்.எம்., கல்வி குழும தலைவர் டாக்டர் சிவகுமார் தலைமை வகித்தார்.

கடந்த 2022 --- 23, 2023 -- 24ம் கல்வி ஆண்டுகளில் படிப்பை வெற்றிகரமாக முடித்த, 2,013 பேருக்கு, மத்திய கல்வி அமைச்சகத்தின், அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சில் முதலீட்டாளர் குழு துணைத்தலைவர் பாலசுப்பிரமணியன் பட்டங்களை வழங்கினார்.

விழாவில், பாலசுப்பிரமணியன் பேசுகையில், ''கல்வி நிறுவனங்களில் புதுமை மையங்கள் உருவாக்குவது அவசியம். மாணவர்கள், கலாசார ரீதியாகவும், சமூக பொறுப்புணர்வுடனும் செயல்பட வேண்டும்,'' என்றார்.

விழாவில், ஈஸ்வரி கல்வி குழும இணை தலைவர் நிரஞ்சன், கல்லுாரி முதல்வர் தேவசுந்தரி உள்ளிட்டோர் பங்கேற்னர்.

Advertisement