டூ - வீலர் திருட்டு வாலிபர் சிக்கினார்

சென்னை: கிண்டி - வேளச்சேரி சாலை பகுதியைச் சேர்ந்தவர் அருண், 29. இவர், காரப்பாக்கம் பகுதியில் உள்ள நிறுவனம் ஒன்றில், மென்பொருள் ஊழியராக பணியாற்றி வருகிறார்.

ஏப்., 25ல், தன் இரு சக்கர வாகனத்தில், தேனாம்பேட்டை கஸ்துாரி ரங்கன் சாலைக்குச் சென்றார். அங்கு ஹோட்டலில் உணவு சாப்பிட்டுள்ளார்.

அப்போது, அங்கு வந்த மர்ம நபர்கள், அருணின் இரு சக்கர வாகனத்தை திருடி தப்பினர். இது குறித்து அவர், தேனாம்பேட்டை காவல் நிலைய குற்றப்பிரிவில் புகார் அளித்தார்.

போலீசாரின் விசாரணையில், தேனி மாவட்டம், போடி தாலுகா, கொள்ளி குடம் தெருவைச் சேர்ந்த தமிழழகன், 19, தன் நண்பருடன் சேர்ந்து, இரு சக்கர வாகனத்தை திருடியது தெரிய வந்தது.

அவரை கைது செய்த போலீசார், அவரது நண்பரை தேடி வருகின்றனர்.

Advertisement