பிறந்த நாள் விழா

பரங்கிப்பேட்டை; பரங்கிப்பேட்டை அடுத்த சம்மந்தம் கிராமத்தில், அகஸ்தியம் பவுண்டேஷன் நிறுவனர் ஈஸ்வர் ராஜலிங்கம் பிறந்த நாள் விழா நடந்தது.

டாக்டர் ஈஸ்வர் ராஜலிங்கம் பிறந்த நாளையொட்டி அவருக்கு மக்கள் வரவேற்பு அளித்தனர். தொடர்ந்து, கேக் வெட்டி, இனிப்பு வழங்கினார்.

பா.ஜ., மேற்கு மாவட்ட தலைவர் தமிழ்ழகன் வாழ்த்திப் பேசினார். விழாவில், லேக்நாத் ஈஸ்வர், ரிஷிநாத் ஈஸ்வர், வின்சென்ட், கண்ணதாசன், பாலாஜி, முருகானந்தம் மற்றும் பா.ஜ., நிர்வாகிகள் உட்பட பலர் பங்கேற்றனர்.

பா.ஜ., மாவட்ட மகளிரணி செயலாளர் அர்ச்சனா ஈஸ்வர் நன்றி கூறினார்.

Advertisement