பஞ்சாபில் சர்வதேச குற்றவாளிகளுடன் தொடர்புடைய 3 பேர் கைது: ஆயுதங்கள் பறிமுதல்

சண்டிகர்: பஞ்சாபில் சர்வதேச குற்றவாளிகளுடன் தொடர்புடைய 3 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து பஞ்சாப் டிஜிபி கவுரவ் யாதவ் கூறியதாவது: சர்வதேச குற்றவாளிகளுடன் தொடர்புடைய விஜய் மாசி, அக்ரேஜ் சிங் மற்றும் இக்பால் சிங் ஆகிய மூன்று கூட்டாளிகளை அமிர்தசரஸ் போலீசார் கைது செய்தனர். இவர்கள் அனைவரும் இங்கிலாந்தைச் சேர்ந்த குற்றவாளிகள் தரம்ப்ரீத் சிங் அல்லது தர்ம சந்து மற்றும் ஜஸ்ஸா ஆகியோருடன் தொடர்புடையவர்கள்.
இவர்களிடமிருந்து 3 க்ளாக் பிஸ்டல்கள், 4 மொபைல் போன்கள் ஒரு இரு சக்கர வாகனம் மற்றும் ஏராளமான ஆயுதங்கள் மீட்கப்பட்டன. முதற்கட்ட விசாரணையில், மூவரும் சர்வதேச குற்றவியல் கும்பல்களுடன் தீவிரமாக தொடர்பில் இருப்பதாகவும், சட்டவிரோத ஆயுத விற்பனை செய்து வந்ததும் தெரியவந்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
பாகிஸ்தான் அதிகாரிகளுக்கு ராணுவ ரகசியங்கள் கசியவிட்ட, பாலக் ஷெர் மாசிஹ் மற்றும் சூரஜ் மாசிஹ் ஆகிய இருவரை நேற்று பஞ்சாப் போலீசார் கைது செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.


மேலும்
-
தமிழக மீனவர்கள் நலன்களுக்காக ஆந்திராவில் ஒலித்த குரல்: பேச்சு நடத்த பவன் கல்யாண் வலியுறுத்தல்
-
பயங்கரவாதத்திற்கு எதிரான போராட்டத்தில் இந்தியாவுக்கு முழு ஆதரவு: மோடியிடம் ரஷ்ய அதிபர் புடின் உறுதி
-
எதற்கு இந்த விளம்பரம்?சுற்றுலா பயணிகளுக்கு பாதுகாப்பு கோரி தொடர்ந்த வழக்கில் சுப்ரீம்கோர்ட் கண்டிப்பு
-
பயங்கரவாதிகளுக்கு உதவியவருக்கு நேர்ந்த கதி; ஆற்றில் உடல் கண்டெடுப்பு
-
சீனாவில் சுற்றுலா படகுகள் கவிழ்ந்து விபத்து; 10 பேர் பரிதாப பலி
-
பயத்தில் நடுங்கும் பாகிஸ்தான்; மீண்டும் ஏவுகணை சோதனை நடத்தி நாடகம்!