கான்பூரில் 5 அடுக்கு மாடி கட்டடத்தில் தீ விபத்து; ஒரே குடும்பத்தில் 5 பேர் பலி

கான்பூர்: உத்தரபிரதேசத்தில் 5 மாடி கட்டடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் உடல்கருகி உயிரிழந்தனர்.
கான்பூரில் உள்ள சமான்காஞ்ச் பகுதியில் அமைந்துள்ள 5 மாடி கட்டடத்தின், முதல் இரு தளங்களில் ஷூ தயாரிப்பு நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த ஷூ தயாரிப்பு நிறுவனத்தில் நேற்றிரவு திடீரென தீவிபத்து ஏற்பட்டுள்ளது. மளமளவென எரிந்த தீ, மற்ற தளங்களுக்கும் பரவியதால், அப்பகுதியில் கரும்புகை எழுந்தது. உடனடியாக தீயணைப்புத்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.
இந்த நிலையில், 4வது மாடிக்கும் தீ பரவிய நிலையில், முகமது டேனிஷ், 45, நஷ்னீன் சாபா,42, ஆகியோர் உடல்கருகி உயிரிழந்தனர். இவர்களின் 3 மகள்களும் தீ விபத்தில் சிக்கிக் கொண்டனர். இறுதியில் அவர்களும் உயிரிழந்தனர்.
4வது மாடிக்கும் பரவிய தீயால், வீட்டு பயன்பாட்டு சிலிண்டர் வெடித்து சிதறியது. இதன் காரணமாகவே, தீவிபத்து மேலும் பரவியிருக்கலாம் என்று சொல்லப்படுகிறது. தீ விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.


மேலும்
-
தமிழக மீனவர்கள் நலன்களுக்காக ஆந்திராவில் ஒலித்த குரல்: பேச்சு நடத்த பவன் கல்யாண் வலியுறுத்தல்
-
பயங்கரவாதத்திற்கு எதிரான போராட்டத்தில் இந்தியாவுக்கு முழு ஆதரவு: மோடியிடம் ரஷ்ய அதிபர் புடின் உறுதி
-
எதற்கு இந்த விளம்பரம்?சுற்றுலா பயணிகளுக்கு பாதுகாப்பு கோரி தொடர்ந்த வழக்கில் சுப்ரீம்கோர்ட் கண்டிப்பு
-
பயங்கரவாதிகளுக்கு உதவியவருக்கு நேர்ந்த கதி; ஆற்றில் உடல் கண்டெடுப்பு
-
சீனாவில் சுற்றுலா படகுகள் கவிழ்ந்து விபத்து; 10 பேர் பரிதாப பலி
-
பயத்தில் நடுங்கும் பாகிஸ்தான்; மீண்டும் ஏவுகணை சோதனை நடத்தி நாடகம்!