தொழிலாளி சாவில் மர்மம்; கிராம மக்கள் சாலை மறியல்

சேத்தியாத்தோப்பு; சென்னையில் இறந்த சேத்தியாத்தோப்பு தொழிலாளி சாவில் மர்மம் இருப்பதாக கூறி கிராம மக்கள் சாலை மறியல் செய்தனர்.
சேத்தியாத்தோப்பு அடுத்த கீழ்வளையமாதேவி கிராமத்தைச் சேர்ந்தவர் அரிகிருஷ்ணன்,33; இவரது மனைவி சபீனா. மூன்றரை வயதில் ஆண் குழந்தை, ஒன்றரை வயதில் பெண் குழந்தை உள்ளது.
அரிகிருஷ்ணன் சென்னையில் தங்கி தனியார் நிறுவனத்தில் வீடுகளுக்கு கூரை சிமெண்ட் ஷீட் போடும் வேலை செய்து வந்தார். கடந்த இரண்டு நாட்களாக அவரது மொபைல் சுவிட்ச் ஆப் ஆகி இருந்தது. சந்தேகமடைந்த அவரது பெற்றோர், அரிகிருஷ்ணன் வேலை செய்த நிறுவனத்தில் நேற்று காலை தொடர்பு கொண்டு கேட்ட போது, சரியாக பதில் கூறவில்லை. மீண்டும் கேட்ட போது, 40 அடி உயரத்தில் ஷீட் போடும் போது, கீழே தவறி விழுந்து இறந்து விட்டதாக கூறினர்.
இதனால் ஆத்திரமடைந்த குடும்பத்தினர் மற்றும் கிராம மக்கள் 100க்கும் மேற்பட்டோர் அரிகிருஷ்ணன் சாவில் சந்தேகம் இருப்பதாகவும், சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை கோரியும் மாலை 4:00 மணிக்கு கீழ்வளையமாதேவி பஸ் நிறுத்தத்தில் சாலை மறியல் செய்தனர். சேத்தியாத்தோப்பு போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பேச்சுவார்த்தை நடத்தி 4:30 மணிக்கு கலைந்து போக செய்தனர். மறியல் காரணமாக பரங்கிப்பேட்டை-விருத்தாசலம் சாலையில் 30 நிமிடம் போக்குவரத்து பாதித்தது.
மேலும்
-
கான்பூரில் 5 அடுக்கு மாடி கட்டடத்தில் தீ விபத்து; ஒரே குடும்பத்தில் 5 பேர் பலி
-
பஞ்சாபில் சர்வதேச குற்றவாளிகளுடன் தொடர்புடைய 3 பேர் கைது: ஆயுதங்கள் பறிமுதல்
-
ஜம்மு காஷ்மீரில் ஜெயில் மீது பயங்கரவாத தாக்குதல் நடத்த சதி; பாதுகாப்பு அதிகரிப்பு
-
வாரத் துவக்கத்தில் தங்கம் விலை சற்று உயர்வு; ஒரு சவரன் ரூ.70,200!
-
வெறிநாய் கடித்து சிறுமி உயிரிழப்பு; தடுப்பூசி போட்டும் பயனில்லை; ஒரே மாதத்தில் 3வது சம்பவம்
-
தே.ஜ., கூட்டணியிலேயே நீடிப்பேன்; மீண்டும் மீண்டும் சொல்கிறார் நிதீஷ் குமார்