இந்திய குடியரசு கட்சி பிரசார கூட்டம்

விருத்தாசலம்; மங்கலம்பேட்டை அடுத்த விசலுாரில், இந்திய குடியரசு கட்சி சார்பில் பட்டியல் இன மக்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி பிரசார கூட்டம் நடந்தது.

அம்பேத்கர் பிறந்தநாள் விழாவையொட்டி நடந்த நிகழ்ச்சிக்கு, மாவட்ட பொருளாளர் கணேசன் தலைமை தாங்கினார். துணை செயலாளர் ஆறுமுகம் வரவேற்றார்.

மாநில பொதுச் செயலாளர் மங்காபிள்ளை மாணவர்கள் மற்றும் பொதுமக் களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி பேசினார்.

விழாவில், எழுத்தாளர் அருள்முத்துக்குமரன், முன்னாள் மாநில சிறுபான்மை ஆணைய உறுப்பினர் கலாமணி, மாவட்ட தலைவர்கள் கதிர்வேல், வீரவேல், மாவட்ட செயலாளர்கள் ராஜிவ்காந்தி, வேலாயுதம், மகளிரணி செயலாளர் கலைச்செல்வி உட்பட பலர் பங்கேற்றனர்.

இளைஞரணி செயலாளர் ராமதாஸ் நன்றி கூறினார்.

Advertisement