காட்டெருமையை வேட்டையாடிய கேரளாவை சேர்ந்த இருவர் கைது; வனத்துறையினர் தீவிர விசாரணை

ஊட்டி; ஊட்டி அருகே காட்டெருமையை துப்பாக்கியால் சுட்டு வேட்டையாடிய, 2 பேர் வனத்துறையால் கைது செய்யப்பட்டனர்.
நீலகிரி மாவட்டம், ஊட்டி அருகே உள்ள கல்லக்கொரை பகுதியில் நேற்று முன்தினம் இரவு காட்டெருமை ஒன்று சாலையில் இறந்து கிடந்தது. மக்கள் வனத்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர். சம்பவ இடத்திற்கு நேற்று சென்ற வனத்துறையினர் இறந்த காட்டெருமையின் உடலை ஆய்வு செய்தபோது துப்பாக்கி குண்டுகள் பாய்ந்து உயிரிழந்துள்ளது தெரியவந்தது.
இதை தொடர்ந்து மருத்துவ குழுவினர் வந்து, இறந்த காட்டெருமையின் உடலில் இருந்த துப்பாக்கி குண்டுகளை அகற்றி உடலை பிரேத பரிசோதனை செய்தனர். இந்த தொடர்பாக, மாவட்டத்தில் உள்ள அனைத்து சோதனை சாவடிக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டு வனத்துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
அப்போது, கூடலுார் சாலையில் நடுவட்டம் பகுதியில் கேரள வாகனத்தை சோதனை செய்த போது, கேரள மாநிலம் நிலம்பூரை சேர்ந்த, அனீஸ் மோன்,43, நிஷார், 45, ஆகிய இருவரை பிடித்து விசாரணை செய்தனர். குற்றத்தைஒப்பு கொண்டதால், அவர்களை கைது விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும்
-
கான்பூரில் 5 அடுக்கு மாடி கட்டடத்தில் தீ விபத்து; ஒரே குடும்பத்தில் 5 பேர் பலி
-
பஞ்சாபில் சர்வதேச குற்றவாளிகளுடன் தொடர்புடைய 3 பேர் கைது: ஆயுதங்கள் பறிமுதல்
-
ஜம்மு காஷ்மீரில் ஜெயில் மீது பயங்கரவாத தாக்குதல் நடத்த சதி; பாதுகாப்பு அதிகரிப்பு
-
வாரத் துவக்கத்தில் தங்கம் விலை சற்று உயர்வு; ஒரு சவரன் ரூ.70,200!
-
வெறிநாய் கடித்து சிறுமி உயிரிழப்பு; தடுப்பூசி போட்டும் பயனில்லை; ஒரே மாதத்தில் 3வது சம்பவம்
-
தே.ஜ., கூட்டணியிலேயே நீடிப்பேன்; மீண்டும் மீண்டும் சொல்கிறார் நிதீஷ் குமார்