குறைகேட்பு கூட்டம் 695 மனுக்கள் குவிந்தன

கடலுார்,; கடலுார் கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைகேட்பு கூட்டம் நேற்று நடந்தது.
கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தலைமை தாங்கி, பொது மக்களிடம் 695 மனுக்கள் பெற்றார். மனுக்களை சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் வழங்கி தகுதியான மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்தினார்.
இதையடுத்து வருவாய்த்துறை சார்பில் பண்ருட்டி வட்டத்தை சேர்ந்த 14 பழங்குடியினர் பயனாளிகளுக்கு தலா 96 ஆயிரம் ரூபாய் வீதம் மொத்தம் 13 லட்சத்து 44 ஆயிரம் ரூபாய் மதிப்பில் இலவச வீட்டுமனைப் பட்டாவிற்கான ஆணையை கலெக்டர் வழங்கினார்.
கூட்டத்தில் டி.ஆர்.ஓ., ராஜசேகரன், மாவட்ட நேர்முக உதவியாளர் (பொது) ரவி, மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் லதா, உதவி ஆணையர் (கலால்) சந்திரகுமார், தனித்துணை ஆட்சியர் (முத்திரைத்தாள்) தனலட்சுமி உட்பட பலர் பங்கேற்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
போனில் பேசும்போது இம்சை மனைவியை கொன்ற கணவர் கைது
-
தீராத நோய்களை தீர்க்கும் ஸ்ரீவைத்ய நாதேஸ்வரா கோவில்
-
சோழர் காலத்திய வீரபத்ர சுவாமி கோவில்
-
108 உயர கோபுரம் கொண்ட வரபிரதா ஸ்ரீ வெங்கடேஸ்வரா கோவில்
-
தேவையின்றி பணம் செலவு செய்யாதீர்கள்! கலெக்டர்களுக்கு முதல்வர் சித்தராமையா உத்தரவு
-
போலீஸ் ஜீப் மோதி பைக்கில் சென்றவர் பலி
Advertisement
Advertisement