வீட்டில் மான் இறைச்சிவிற்ற பெண் சிக்கினார்

டி.என்.பாளையம்:கே.என்.பாளையம் அருகே நரசிபுரத்தில், மான் கறி விற்பதாக வந்த புகாரின் அடிப்படையில், பங்களாப்புதுார் போலீசார் நேற்று சோதனை மேற்கொண்டனர். சாந்தி, 40, என்பவர் வீட்டில், ௧௦ கிலோ மான் இறைச்சி இருந்தது. அவரை பிடித்து சத்தியமங்கலம் வனத்து


றையினரிடம் ஒப்படைத்தனர். கே.என்.பாளையத்தை சேர்த்த பாலு, தமிழ்செல்வன் ஆகியோர், மானை வேட்டையாடி சாந்தியிடம் கொடுத்து, கறியை விற்பனை செய்வது தெரிய வந்தது. போலீசார் வருவதை அறிந்து இருவரும் தப்பியுள்ளனர். இருவரையும் சத்தி வனத்துறையினர் தேடி வருகின்றனர்.

Advertisement