தி.மு.க., கவுன்சிலரை கைது செய்யக்கோரி வி.ஏ.ஒ.,க்கள் காலவரையற்ற போராட்டம் அலுவலகங்கள் பூட்டி கிடப்பதால் மக்கள் அவதி

திண்டிவனம்: தி.மு.க., கவுன்சிலரை கைது செய்ய கோரி வி.ஏ.ஓ.,க்கள் போராட்டம் நடத்தி வருவதால், திண்டிவனத்தில் வி.ஏ.ஓ.க்கள் அலுவலகங்கள் பூட்டி கிடக்கிறது. இதனால் சான்றிதழ்கள் பெற முடியாமல் மக்கள் அவதிக்கு ஆளாகி உள்ளனர்.
திண்டிவனம் நகராட்சி 28 வது வார்டு தி.மு.க., கவுன்சிலர் சந்திரன், தனது வார்டு நபரின் திருமண சான்றிதழ் பெற, கடந்த 29 ம் தேதி, ராஜாங்குளம் மேடு வி.ஏ.ஓ., அலுவலகம் சென்றார். வி.ஏ.ஓ., சிற்றரசு, 42; கால தாமதமாக வந்ததால், தி.மு.க.,கவுன்சிலர் மற்றும் அவரது ஆதரவாளர்களுக்கும், வி.ஏ.ஓ., விற்கு வாக்குவாதம் ஏற்பட்டு கை கலைப்பானது.
தி.மு.க., கவுன்சிலரை கைது செய்ய கோரி, வி.ஏ.ஓ.க்கள் முற்றுகை போராட்டம் நடத்தியதால், கவுன்சிலர் சந்திரன் உள்ளிட்டோர் 4 பேர் மீது வழக்கு பதிந்து, மணிகண்டன், கார்த்திக்கை கைது செய்தனர். கவுன்சிலர் சந்திரன் அளித்த புகாரின்பேரிலும் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
இந்நிலையில், கவுன்சிலர் சந்திரனை கைது செய்யக்கோரி, கடந்த 2ம் தேதி திண்டிவனம் சப்கலெக்டர் அலுவலகத்தை வி.ஏ.ஓ., சங்கத்தினர் முற்றுகையிட்டனர்.
கவுன்சிலர் கைது செய்ய மறுத்தால், 3ம் தேதி முதல் 19 வகை சான்றிதழ் வழங்கும் பணியை புறக்கணிக்கும் போராட்டத்தை துவக்கினர்.
நேற்று திண்டிவனம் தாலுகா அலுவலகத்தில் அமர்ந்து, கவுன்சிலரை கைது செய்ய கோரி உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர்.
போராட்டம் காரணமாக ராஜாங்குளம் மேடு, டவுன் உட்பட திண்டிவனத்தில் பெரும்பலான வி.ஏ.ஓ., அலுவலகங்கள் பூட்டி கிடந்தது. பொது மக்கள் சாதி, வருமானம், குடியிருப்பு உள்ளிட்ட சான்றிதழ்கள பெற முடியாமல் அவதிக்கு ஆளாகினர்.
மேலும்
-
சி.பி.ஐ., இயக்குநர் பிரவீனின் பதவிக்காலம் மேலும் ஒரு ஆண்டு நீட்டிக்கப்பட வாய்ப்பு
-
2 நாட்களில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.2,160 அதிகரிப்பு; வரலாறு காணாத உச்சம்!
-
பயங்கரவாதிகள் பதுக்கிய ஆயுதங்கள் கண்டெடுப்பு; பஞ்சாப் போலீஸ் தீவிர விசாரணை
-
பட்டுக்கோட்டையில் பெண் தலை துண்டித்து கொலை; மர்ம நபர்களை தேடும் போலீசார்
-
துருக்கி அதிபர் உதவியுடன் போரை முடிவுக்கு கொண்டு வருவேன்: அதிபர் டிரம்ப் சபதம்!
-
சுப்ரீம்கோர்ட் நீதிபதிகள் 21 பேரின் சொத்து விவரங்கள்: இணையத்தில் வெளியீடு