வாலிபரை தாக்கிய இரண்டு பேர் கைது

விழுப்புரம்: விழுப்புரத்தில் வாலிபரை தாக்கிய இருவரை போலீசார் கைது செய்தனர்.

விழுப்புரம் கிழக்கு சண்முகபுரம் காலனி செந்தில்குமார் மகன் பிரதிப்குமார், 22; இவர், தனது பைக்கில் நேற்று முன்தினம் சென்ற போது, விழுப்புரம் மாதாகோவில் பஸ் நிறுத்தம் அருகே, எதிரில் வந்த மருதுார்மேடு காத்தவராயன் மகன் அர்ஜூனன்,24; சங்கர் மகன் சரவணன்,20; ஊரல்கரைமேடு ராமலிங்கம் மகன் விக்கி, 22; ஆகியோர் பைக் மூலம் மோதினர்.

இதை பிரதிப்குமார் தட்டி கேட்டபோது, மூவரும் சேர்ந்து திட்டி, தாக்கினர். விழுப்புரம் டவுன் போலீசார் அர்ஜூனன் உட்பட மூன்று பேர் மீது வழக்குப் பதிந்து அர்ஜூனன், சரவணனை கைது செய்தனர்.

Advertisement