ஏ.ஐ.டி.யு.சி., ஆர்ப்பாட்டம்



கரூர்:கரூர் மாவட்ட ஏ.ஐ.டி.யு.சி., சார்பில், சக்திவேல் தலைமையில், தலைமை தபால் நிலையம் முன், நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.

அதில், உச்சநீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில், தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதியம் நிர்ணயம் செய்ய வேண்டும், குறைந்தபட்ச தீர்ப்பை அமலாக்காத நிறுவனங்கள், அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், குறைந்தபட்ச ஊதியத்தை, உள்ளாட்சி அமைப்புகளில் முன் தேதியிட்டு அமலாக்க வேண்டும், கடந்த, 2017ல் நிர்ணயம் செய்யப்பட்ட குறைந்தபட்ச ஊதியத்தை உயர்த்தி திருத்தி அமைக்க வேண்டும் உள்ளிட்ட, பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
ஆர்ப்பாட்டத்தில், மாவட்ட செயலாளர் வடிவேலன், நிர்வாகிகள் குப்புசாமி, கலாராணி, ஞானவேல், மாவட்ட இ.கம்யூ., செயலாளர் நாட்ராயன் உள்பட, பலர் பங்கேற்றனர்.

Advertisement