கொடைக்கானல் ரோட்டில் பாறையில் மோதி கவிழ்ந்த வேன்

வத்தலக்குண்டு: திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலுக்கு சுற்றுலா சென்று விட்டு திரும்பிய போது டம்டம் பாறை அருகே பாறையில் மோதி ரோட்டில் வேன் கவிழ்ந்ததில் மதுரையைச் சேர்ந்த 20 பேர் படுகாயம் அடைந்தனர்.

மதுரை விளாச்சேரி குலாம் அர்ஷத் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் வேனில் கொடைக்கானலுக்கு சுற்றுலா சென்றனர். சுற்றுலா தலங்களை சுற்றி பார்த்து விட்டு நேற்றிரவு மதுரை புறப்பட்டனர். நேற்றிரவு 9:30 மணி அளவில் டம்டம் பாறை அருகே வேன் வந்த போது ரோட்டோரம் இருந்த பாறையில் மோதி ரோட்டில் கவிழ்ந்தது. இதில் வேனில் பயணம் செய்த 10 சிறுவர்கள், குழந்தைகள் உட்பட 20 பேர் படுகாயம் அடைந்தனர். தேனி மாவட்டம் தேவதானப்பட்டி போலீசார், வத்தலக்குண்டு தீயணைப்பு துறையினர் மற்றும் தமிழக முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தினர் விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். வத்தலக்குண்டு அரசு மருத்துவமனையில் காயமுற்றவர்கள் முதலுதவி பெற்று, மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டனர்.

இந்த விபத்தில் ஆரிப் 5, அர்தி 5, சகானா 12, அலிசா 1, முகமது ஆரிப் 11, ஆர்த்திபா 5, நஜீம் 5, சபி 10, சமீர் 10, முகமது சமீம் 7, உள்ளிட்டோர் காயமுற்றனர்.

Advertisement