நிழலில் தோழர்கள்; அக்னி வெயிலில் பயணியர்

தளவாய்புரம் : ராஜபாளையம் அருகே செட்டியார்பட்டியில் இ.கம்யூ.வின் ஏ.ஐ.டி.யூ.சி சார்பில் பயணிகளுக்கான நிழற் குடையில் பொது வேலை நிறுத்த விளக்க கூட்டம் நடந்தது. இதனால் கொளுத்தும் வெயிலில் பயணிகள் பஸ்சிற்காக காத்திருந்தனர்.
ராஜபாளையம் அருகே செட்டியார்பட்டி அரசரடி பகுதியில் இ.கம்யூ., ஏ.ஐ.டி.யூ.சி சார்பில் மே 20 இல் நடைபெறும் தொழிலாளர் பொது வேலை நிறுத்தத்தை ஆதரித்து விளக்க கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
மாவட்ட செயலாளர் லிங்கம் தலைமையில் நடந்தது. ஏ.ஐ.டி.யூ.சி அமைப்பாளர் ரவி ஒன்றிய செயலாளர் கணேச மூர்த்தி உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர். அறிவித்தபடி விளக்க கூட்டம் பொது இடத்தில் நடைபெறாமல் அப்பகுதியில் பயணிகளுக்காக அமைக்கப்பட்ட நிழற் குடையை அனைவரும் ஆக்கிரமித்தனர்.
கட்சியினர் அனைவரும் கூடியதால் பஸ்சுக்காக காத்திருந்த பெண்கள் உள்ளிட்ட பயணிகள் வெளியேறி உச்சி வெயிலில் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. மக்களிடையே வேதனை ஏற்படுத்தியது.
மேலும்
-
தமிழகத்தில் நாளை போர்க்கால ஒத்திகை: 4 இடங்களை தேர்வு செய்த மத்திய அரசு
-
பயங்கரவாதத்தை எதிர்த்துப் போராட இந்தியாவுக்கு முழு ஆதரவு: அமெரிக்க சபாநாயகர் அறிவிப்பு
-
காஷ்மீர் பயங்கரவாத தாக்குதலுக்கு ஐ.நா.,வில் கடும் கண்டனம்; பாகிஸ்தானுக்கு உலக நாடுகள் கேள்வி
-
12ம் வகுப்பு தேர்வு ரிசல்ட் தேதி மாற்றம்; மே 8ல் வெளியாகும் என அறிவிப்பு
-
காஷ்மீரில் பயங்கரவாதிகள் 2 பேர் கைது; ஏராளமான ஆயுதங்கள் பறிமுதல்
-
சி.பி.ஐ., இயக்குநர் பிரவீனின் பதவிக்காலம் மேலும் ஒரு ஆண்டு நீட்டிக்கப்பட வாய்ப்பு