கரூர் கலெக்டர் அலுவலக வளாகத்தில்குடிநீர் கிடைக்காமல் மக்கள் தவிப்பு




கரூர்:கரூர் கலெக்டர் அலுவலக வளாகத்தில், குடிநீர் இன்றி பொதுமக்கள் தவிக்கின்றனர்.கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், ஏராளமான அலுவலக பிரிவுகள் உள்ளன. நுாற்றுக்கணக்கானோர் பணியாற்றி வருகின்றனர். வாரந்தோறும் மக்கள் குறைதீர் கூட்டம், மேலும் பல்வேறு வேலை நிமித்தமாக, தினமும் கலெக்டர் அலுவலகத்திற்கு நுாற்றுக்கணக்கானோர் வந்து செல்கின்றனர். கரூர் கலெக்டர் அலுவலக வளாகத்தில், குடிநீர் தேவையை கருத்தில் கொண்டு சின்டெக்ஸ் தொட்டி வைக்கப்பட்டு இருந்தது.


அதில், தினமும் தண்ணீரை நிரப்பி வந்தனர்.தற்போது சின்டெக்ஸ் தொட்டி அகற்றப்பட்டு விட்டது. மக்களுக்கு குடிநீர் வசதி இல்லாததால் சிரமப்படுகின்றனர். தற்போது சுட்டெரிக்கும் கோடை வெயில் வாட்டி வதைக்கிறது. தண்ணீருக்காக மக்கள் அலையும் நிலை உள்ளது. கடைகளில் பணம் கொடுத்து, பாட்டில் தண்ணீர் வாங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. கலெக்டர் அலுவலகம் வந்து செல்லும் மக்களுக்காக, குடிநீர் வசதி ஏற்படுத்தி தர வேண்டும்.

Advertisement