290 ரூபாய் சம்பளத்துக்கு ஆந்திரா, மஹா., பணியாளர்கள்

ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் மாநகராட்சியில், 140 டன் குப்பை தினசரி சேகரிக்கப்படுகிறது. 'எல்.டி., மேன் பவர் சொல்யூசன்' என்ற நிறுவனம் துப்புரவு பணியை செய்து வருகிறது.

குப்பை சேகரிப்பு பணிக்காக, இ.எஸ்.ஐ., - பி.எப்., பிடித்தம் போக, 290 ரூபாய் கூலியாக கிடைக்கிறது. துர்நாற்றத்திற்கு மத்தியில் பணியாற்ற, 338 ரூபாய் ஊதியம் வழங்கப்படுவதால், உள்ளூர் மக்கள் துாய்மை பணிக்கு வர தயங்குகின்றனர். அதனால், 500 ரூபாயாக கூலியை உயர்த்த, பொது சுகாதார குழு கூட்டம் மற்றும் கவுன்சிலர்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றியும் கூலியை உயர்த்த முயற்சிக்கவில்லை.

இதனால், எல்.டி., மேன் பவர் சொல்யூசன் நிறுவனம், ஆந்திரா, மஹாராஷ்டிர மாநிலங்களில் இருந்து ஆட்களை வரவழைத்து, துப்புரவு பணியில் ஈடுபட வைக்கிறது.

Advertisement