பாரதிதாசன் பிறந்த நாள் போட்டி9 பேர் மாநில போட்டிக்கு தேர்வு




கரூர்:பாரதிதாசன் பிறந்த நாளை முன்னிட்டு நடத்த போட்டிகளில், 9 மாணவ, மாணவியர் மாநில போட்டி தேர்வு பெற்றுள்ளனர்.
கரூர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தில், பாரதிதாசன் பிறந்த நாளை முன்னிட்டு தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் பல்வேறு போட்டிகள் நடந்தது. இதனை, முதன்மை கல்வி அலுவலர் (பொ) செல்வமணி தொடங்கி வைத்தார். கடந்த, 29 முதல், பள்ளி மாணவ, மாணவியருக்கு பேச்சு போட்டி, கவிதை போட்டி, கட்டுரை போட்டி நடந்தது. இதில், 8 ஊராட்சி ஒன்றியங்களில் வட்டார அளவில் நடத்த போட்டியில் இருந்து மாவட்ட அளவிலான போட்டிக்கு, 72 பேர் தேர்வு செய்யப்பட்டனர். அந்த மாணவ, மாணவியருக்கு மாவட்ட அளவிலான போட்டிகள் நேற்று நடந்தது. இதிலிருந்து, 9 பேர் மாநில அளவிலான போட்டிகளுக்கு தேர்வு செய்யப்பட்டு உள்ளனர். இப்போட்டியில், பள்ளி தலைமை ஆசிரியர்கள் நடுவர்களாக செயல்பட்டனர்.
நிகழ்ச்சியில், முதன்மை கல்வி அலுவலர் நேர்முக உதவியாளர் சக்திவேல், தமிழ் செல்வி உள்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement