5 எழுத்தாளர்களின் நுால் நாட்டுடமை ரூ.50 லட்சம் வழங்கினார் முதல்வர்

சென்னை : ஐந்து எழுத்தாளர்களின் நுால்கள் நாட்டுடமை ஆக்கப்பட்டு, அவர்களுக்கு உரிமை தொகையாக தலா, 10 லட்சம் ரூபாயை, முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்.
பாவேந்தர் பாரதிதாசன் பிறந்த நாளை முன்னிட்டு, ஏப்ரல் 29 முதல் மே 5ம் தேதி வரை, தமிழ் வார விழா கொண்டாடப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்திருந்தார்.
அதன்படி, கவியரங்கம், இலக்கிய கருத்தரங்கம், பாரதிதாசன் இளம் படைப்பாளர் விருது, தமிழ் இலக்கியம் போற்றும் நிகழ்ச்சிகள், பள்ளிகளில் தமிழ் நிகழ்ச்சிகள், தமிழ் இசை, கலை நிகழ்ச்சிகள் நடத்த வேண்டும் எனவும், முதல்வர் உத்தரவிட்டு இருந்தார்.
இதற்காக, தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறைக்கு, 50 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டது.
அதன்படி, சென்னை கலைவாணர் அரங்கில், தமிழ் வார விழா கொண்டாடப்பட்டது. இதன் நிறைவு விழாவான நேற்று, முதல்வர் ஸ்டாலின் பங்கேற்றார்.
தமிழ் வளர்ச்சி துறை வாயிலாக, கவிஞர் அப்துல் ரகுமான், எழுத்தாளர்கள் மெர்வின், பழனி, கொ.மா.கோதண்டம், புலவர் இலமா தமிழ்நாவன் ஆகியோரின் நுால்கள் நாட்டுடமை ஆக்கப்பட்டுள்ளன. அதற்காக, நுாலுரிமை தொகையாக தலா, 10 லட்சம் ரூபாய்க்கான காசோலைகளை, முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்.
கலை, பண்பாட்டு துறையின் இசை கல்லுாரிகள் மற்றும் கவின் கலை கல்லுாரிகளில் படிக்கும் மாணவ - மாணவியருக்காக நடத்தப்பட்ட பாரதிதாசன் பெருமையை போற்றும் இசை, நடனம், ஓவிய போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு, பரிசுகளை முதல்வர் வழங்கினார்.
விழாவில், அமைச்சர்கள் துரைமுருகன், சாமிநாதன், ராஜ கண்ணப்பன், சுப்பிரமணியன், சேகர்பாபு, சென்னை மேயர் பிரியா, தலைமை செயலர் முருகானந்தம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
மேலும்
-
இந்திய தாக்குதலில் 80 பயங்கரவாதிகள் காலி !
-
பஹல்காம் தாக்குதலுக்கு இதுதான் பதிலடி; உள்துறை அமைச்சர் அமித்ஷா
-
நள்ளிரவு 1.22 மணி முதல் 2.46 மணி வரை: ஆபரேஷன் சிந்தூர் முக்கிய தருணங்கள்
-
பாக்., பயங்கரவாத முகாம்களைத் தாக்க இந்தியா பயன்படுத்திய ஆயுதங்கள் இதுதான்!
-
தேசிய அளவில் முதலிடம், உலகளவில் இரண்டாமிடம்: டிரெண்டிங்கில் ஆபரேஷன் சிந்தூர்
-
சீல், அட்டோ 3 கார்கள் புதுப்பிப்பு