மத்திய அரசுக்கு எதிராக தர்ணா அரசு வளாகத்தில் விருந்தா? பா.ஜ., குற்றச்சாட்டு

திருப்பூர்,: திருப்பூரில், வக்ப் வாரிய திருத்த சட்டத்தை எதிர்த்து, தர்ணாவில் ஈடுபட்டோருக்கு, அரசு வளாகத்தில் உணவு சமைத்து வழங்கப்பட்டதற்கு பா.ஜ., கண்டனம் தெரிவித்துள்ளது.
திருப்பூர், செரங்காடு மண்டல பா.ஜ., தலைவர் மந்த்ராசலமூர்த்தி கூறியதாவது:
வக்ப் வாரிய திருத்த சட்டம், அனைத்து தரப்பினரும் பயன்பெறும் விதமாக உள்ளது. மத்திய அரசின் மீதான வன்மம் காரணமாக, எதிர்க்கட்சிகள் இதுகுறித்து தவறான தகவலை மக்கள் மத்தியில் பரப்பி வருகின்றன.
வக்ப் வாரிய திருத்த சட்டத்திற்கு எதிராகவும், மத்திய அரசை கண்டித்தும், திருப்பூர், செல்லாண்டியம்மன் துறை அருகே, ஒருங்கிணைந்த இஸ்லாமிய ஜமா - அத் கூட்டமைப்பு சார்பில் மூன்று நாட்கள் தர்ணா நடந்தது. போராட்டம் நடந்த இடம் அருகே, நகர்ப்புற துணை சுகாதார மைய வளாகம் மற்றும் மேல்நிலைத் தொட்டி ஆகியவை அமைந்துள்ளன.
போராட்டத்தில் கலந்து கொண்டவர்களுக்கு, இந்த வளாகத்தில் பந்தல் அமைத்து, அடுப்பு வைத்து சமையல் செய்து, விருந்து வழங்கப்பட்டுள்ளது. மத்திய அரசுக்கு எதிராக போராடியவர்களுக்கு, தமிழக அரசுக்கு சொந்தமான வளாகத்தில் விருந்து நடத்தப்பட்டது கண்டிக்கத்தக்கது.
இதுபோன்ற நடைமுறைகள் தவறான முன்னுதாரணமாக அமைந்து விடும். மாநில அரசுக்கு எதிராக போராட்டம் என்று பேசினாலே கெடுபிடி காட்டுவோர், இதற்கு என்ன பதில் தரப்போகின்றனர்?
இவ்வாறு அவர் கூறினார்.

மேலும்
-
இந்திய தாக்குதலில் 80 பயங்கரவாதிகள் காலி !
-
பஹல்காம் தாக்குதலுக்கு இதுதான் பதிலடி; உள்துறை அமைச்சர் அமித்ஷா
-
நள்ளிரவு 1.22 மணி முதல் 2.46 மணி வரை: ஆபரேஷன் சிந்தூர் முக்கிய தருணங்கள்
-
பாக்., பயங்கரவாத முகாம்களைத் தாக்க இந்தியா பயன்படுத்திய ஆயுதங்கள் இதுதான்!
-
தேசிய அளவில் முதலிடம், உலகளவில் இரண்டாமிடம்: டிரெண்டிங்கில் ஆபரேஷன் சிந்தூர்
-
சீல், அட்டோ 3 கார்கள் புதுப்பிப்பு