எஸ்.ஆர்.கே பள்ளி ஆண்டு விழா

வில்லியனுார்: எஸ்.ஆர்.கே மேல்நிலைப் பள்ளி வெள்ளி விழாவை முன்னிட்டு,25ம் ஆண்டு விழாவில் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு நடிகை தேவயாணி பரிசு வழங்கி பாராட்டினார்.

கரிக்கலாம்பாக்கம் எஸ்.ஆர்.கே மேல்நிலைப் பள்ளியின் வெள்ளி விழாவை முன்னிட்டு 2024-25ம் கல்வியாண்டிற்கான 25ம் ஆண்டுவிழா பள்ளி வளாகத்தில் நடந்தது. விழாவிற்கு பள்ளி நிறுவனர் தியாகராஜன் தலைமை தாங்கினார். பள்ளி தாளாளர் மகேந்திரன் முன்னிலை வகித்தார். பள்ளியின் தலைவர் மலர்விழி வரவேற்றார்.

ஒருங்கிணைப்பாளர் சங்கீதா பள்ளி ஆண்டறிக்கை வாசித்தார். சிறப்பு விருந்தினராக நடிகை தேவயாணி குத்துவிளக்கேற்றி விழாவை துவக்கிவைத்தார்.

அதனை தொடர்ந்து பள்ளியில் கடந்தாண்டு பத்தாம் வகுப்பு, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 அரசு பொதுத்தேர்வில் சாதனை படைத்த மாணவர்களுக்கும், பள்ளியில் நடப்பாண்டு எல்.கே.ஜி முதல் பிளஸ் 2 வரையில் வகுப்பில் முதல் இரண்டு இடங்களை பிடித்த மாணவர்களும் மற்றும் பள்ளியில் நடந்த பல்வேறு விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கும் பரிசு வழங்கி பாராட்டினார்.

பள்ளி மாணவர்களின் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடந்தது. மேலும் பள்ளிமாணவர்களின் வளர்ச்சிக்கு பாடுபட்டஆசிரியர்களையும், ஆண்டுவிழா சிறப்பாக நடைபெற உறுதுணையாக இருந்த அனைத்து ஊழியர்களையும் தாளாளர் மகேந்திரன் கவுரவபடுத்தி, நன்றி கூறினார்.

Advertisement