பட்டுக்கோட்டையில் பெண் தலை துண்டித்து கொலை; மர்ம நபர்களை தேடும் போலீசார்

தஞ்சாவூர்: பட்டுக்கோட்டையில் டிராவல்ஸ் நிறுவனம் நடத்தி வந்த பெண்ணை தலை துண்டித்து படுகொலை செய்த நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை உதயசூரியபுரம் மீன் மார்க்கெட் பகுதியில் வசிக்கும் பாலன் மனைவி சரண்யா, 35, நேற்றிரவு அடையாளம் தெரியாத மர்ம நபர்களால் தலை துண்டித்து படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இவருக்கு முன்பு மதுரையைச் சேர்ந்த சண்முகசுந்தரம் என்பவருக்கும் திருமணம் ஆகி 15 வயதில் சாமுவேல் என்ற மகனும், 13 வயதில் சரவணன் என்ற மகனுடன் மதுரையில் வசித்து வந்துள்ளனர்.
கடந்த 2021ல் சண்முக சுந்தரம் என்பவர் இறந்துவிட்ட நிலையில், சரண்யா பட்டுக்கோட்டை தாலுகா, கழுகபுலி காடு கிராமத்தைச் சேர்ந்த பாலன், 45, என்பவரை இரண்டாவது திருமணம் செய்து கொண்டு குடும்பத்துடன் உதய சூரியபுரத்தில் வாடகை வீட்டில் வசித்து வருகின்றனர்.
பாலனும், சரண்யாவும் உதயசூரியபுரம் கடைத்தெருவில் அய்யனார் டிராவல்ஸ் மற்றும் சரண்யா ஜெராக்ஸ் கடை நடத்தி வந்துள்ளனர்.
நேற்று இரவு பாலன் மற்றும் சரண்யாவின் மகன்கள் ஆகியோர் கடையை பூட்டி விட்டு இருசக்கர வாகனத்தில் வீட்டிற்கு சென்று உள்ளனர். சரண்யா கடையை பூட்டி விட்டு கடையிலிருந்து ஒரு கிலோமீட்டர் தொலைவில் உள்ள வீட்டிற்கு நடந்து சென்றுள்ளார்.
அப்போது சரண்யா வீட்டிற்கு செல்லும் பகுதியில் அடையாளம் தெரியாத நபர்களால் வெட்டப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். கழுத்து மற்றும் தலையின் பின்பக்கத்தில் வெட்டப்பட்டதால் தலை துண்டானது.
சரண்யா மதுரையில் வசித்தபோது பாஜ கட்சியில் பொறுப்பில் இருந்துள்ளார். இப்போது பொறுப்பில் எதிலும் இல்லை. என்ன காரணத்தால் அவர் கொலை செய்யப்பட்டார் என்பது பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.










மேலும்
-
12ம் வகுப்பு தேர்வு ரிசல்ட் தேதி மாற்றம்; மே 8ல் வெளியாகும் என அறிவிப்பு
-
காஷ்மீரில் பயங்கரவாதிகள் 2 பேர் கைது; ஏராளமான ஆயுதங்கள் பறிமுதல்
-
சி.பி.ஐ., இயக்குநர் பிரவீனின் பதவிக்காலம் மேலும் ஒரு ஆண்டு நீட்டிக்கப்பட வாய்ப்பு
-
2 நாட்களில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.2,160 அதிகரிப்பு; வரலாறு காணாத உச்சம்!
-
பயங்கரவாதிகள் பதுக்கிய ஆயுதங்கள் கண்டெடுப்பு; பஞ்சாப் போலீஸ் தீவிர விசாரணை
-
துருக்கி அதிபர் உதவியுடன் போரை முடிவுக்கு கொண்டு வருவேன்: அதிபர் டிரம்ப் சபதம்!