சி.பி.ஐ., இயக்குநர் பிரவீனின் பதவிக்காலம் மேலும் ஒரு ஆண்டு நீட்டிக்கப்பட வாய்ப்பு

4

புதுடில்லி: சி.பி.ஐ., இயக்குநர் பிரவீனின் பதவிக்காலம் மேலும் ஓராண்டு நீட்டிக்கப்படலாம் என தகவல் வெளியாகி உள்ளது.


சி.பி.ஐ., அமைப்புக்கு அடுத்த இயக்குனரை தேர்வு செய்வது தொடர்பாக, பிரதமர் மோடியுடன், லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுல் நேற்று ஆலோசனை நடத்தினார். சி.பி.ஐ., இயக்குநராக உள்ள பிரவீன் சூட்டின் பதவிக்காலம், வரும் 25ம் தேதியுடன் முடிவடைகிறது.

இதையடுத்து, புதிய இயக்குனரை தேர்வு செய்வதற்கான தேர்வு குழுவின் கூட்டம், டில்லியில் பிரதமர் மோடியின் அதிகாரப்பூர்வ இல்லத்தில் நேற்று இரவு நடந்தது. பிரதமர் மோடி, லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுல், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஆகியோர் இது குறித்து ஆலோசனை நடத்தினர்.



புதிய சி.பி.ஐ., இயக்குநர் தேர்வு தொடர்பாக தேர்வுக்குழு கூட்டத்தில் ஒருமித்த கருத்து ஏற்படவில்லை. இதனால் சி.பி.ஐ., இயக்குநர் பிரவீனின் பதவிக்காலம் மேலும் ஓராண்டு நீட்டிக்கப்படலாம் என தகவல் வெளியாகி உள்ளது.

யார் இந்த பிரவீன் சூட்?



* 1986ம் ஆண்டு கர்நாடகப் பிரிவைச் சேர்ந்த ஐ.பி.எஸ்., அதிகாரியான பிரவீன் சூட், டி.ஜி.பி., ஆக இருந்தார். இவர் மே 25ம் தேதி 2023ம் ஆண்டு சி.பி.ஐ., இயக்குநராக பொறுப்பேற்றார்.



* மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையச் சட்டம், 2003, சி.பி.ஐ., இயக்குநரின் பதவிக்காலத்தை இரண்டு ஆண்டுகளாக நிர்ணயித்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement