முன்னாள் ராணுவ வீரர்கள் நலச்சங்கத்தின் சிறப்பு கூட்டம்

புதுச்சேரி: காரைக்கால் மாவட்ட முப்படை முன்னாள் ராணுவ வீரர்கள் மற்றும் வீரத் தாய்மார்கள் நலச் சங்கத்தின் சிறப்புக் கூட்டம் நேரு நகரில் நடந்தது.

கூட்டத்திற்கு தற்காலிக பொறுப்பாளர் ராபர்ட் சார்லஸ் தலைமை தாங்கினார். சங்கத்தின் மாநிலத் தலைவர் மோகன் முன்னிலை வகித்தார். காரைக்கால் மாவட்ட உறுப்பினர் சந்தோஷ் குமார் வரவேற்றார்.

கூட்டத்தில், காரைக்கால் உறுப்பினர் ஜானகி அம்மாள் மறைவிற்கு மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. தொடர்ந்து, அவரது வாரிசுக்கு சங்கத்தின் சார்பில் ஈமச்சடங்கு உதவித் தொகையாக 3000 ரூபாய் வழங்கப்பட்டது.

மேலும், கூட்டத்தில் பங்கேற்ற உறுப்பினர்கள் அனைவருக்கும் நினைவுப் பரிசுகள் வழங்கப்பட்டன. கூட்டத்தில் முன்னாள் ராணுவ வீரரின் மகனும், காரைக்கால் மாவட்ட பா.ஜ., செயலாளருமான முருகதாஸ் பங்கேற்று வாழ்த்தி பேசினார்.

ஏற்பாடுகளை உறுப்பினர்கள் சரவணன், பரமசிவம், வெங்கடேஷ், நித்யானந்தம் ஆகியோர் செய்திருந்தனர். இதில், புதுச்சேரி நிர்வாகிகள் சுரேஷ்குமார், தொம்னிக், ராமமூர்த்தி, லட்சுமிநாராயணன், முரளி, முருகானந்தம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Advertisement