மூடப்பட்ட மில்களை திறக்க மாதர் சங்கம் வலியுறுத்தல்

புதுச்சேரி: அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க புதுச்சேரி நகர கமிட்டி மாநாடு, அன்னை தெரசா வீதி, சரஸ்வதி ஹாலில் நடந்தது.
மாநாட்டில், லலிதாம்பிகை, நேத்ராவதி, மீனாட்சி ஆகியோர் தலைமை குழு உறுப்பினர்களாக தேர்வு செய்யப்பட்டனர். மாநாட்டை துவக்கி வைத்து சங்கத்தின் மாநில பொருளாளர் மாரிமுத்து பேசினார். மாநாட்டு அறிக்கை நகர கமிட்டி செயலாளர் ஜானகி வாசித்தார். மாநில தலைவர் முனியம்மாள் செயலாளர் இளவரசி வாழ்த்தி பேசினர். சங்கத்தின் அகில இந்திய துணை செயலாளர் சுகந்தி, நிர்வாகிகள் சத்யா, உமாசாந்தி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
மாநாட்டில் புதிதாக 13 உறுப்பினர்கள் கொண்ட புதுச்சேரி நகர கமிட்டி தேர்வு செய்யப்பட்டது. கமிட்டியின் செயலாளராக ஜானகி மீண்டும் தேர்வு செய்யப்பட்டார்.
கடைகள், வர்த்தக நிறுவனங்களில் பெண்கள் பணிபுரியும் இடங்களில் பாலியல் புகார் கமிட்டிகளை புதுச்சேரி அரசு அமைத்திட வேண்டும். போதை கலாசாரத்தை தடுக்க வேண்டும். சாராய ஆலைகளை திறப்பதற்கு பதிலாக மூடப்பட்ட ஏ.எப்.டி., சுதேசி, பாரதி ஆகிய 3 பஞ்சாலைகளை திறக்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
மேலும்
-
12ம் வகுப்பு தேர்வு ரிசல்ட் தேதி மாற்றம்; மே 8ல் வெளியாகும் என அறிவிப்பு
-
காஷ்மீரில் பயங்கரவாதிகள் 2 பேர் கைது; ஏராளமான ஆயுதங்கள் பறிமுதல்
-
சி.பி.ஐ., இயக்குநர் பிரவீனின் பதவிக்காலம் மேலும் ஒரு ஆண்டு நீட்டிக்கப்பட வாய்ப்பு
-
2 நாட்களில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.2,160 அதிகரிப்பு; வரலாறு காணாத உச்சம்!
-
பயங்கரவாதிகள் பதுக்கிய ஆயுதங்கள் கண்டெடுப்பு; பஞ்சாப் போலீஸ் தீவிர விசாரணை
-
பட்டுக்கோட்டையில் பெண் தலை துண்டித்து கொலை; மர்ம நபர்களை தேடும் போலீசார்