சாரணப் பயிற்சி முகாம்

திருக்கனுார்: கூனிச்சம்பட்டு பாரதிதாசன் அரசு தொடக்கப் பள்ளியில் சாரணப் பிரிவின் 5 முதல் 10 வயது குருளையர்களுக்கான பயிற்சி முகாம் நடந்தது.

வட்டம் 5ன் பள்ளித் துணை ஆய்வாளர் புவியரசன் தலைமை தாங்கி, முகாமை துவக்கி வைத்தார். புதுச்சேரி, பாரத சாரண, சாரணிய மாநில அமைப்பு ஆணையர் சண்முகம், குருளையர்களுக்கான சட்டம், குறிக்கோள், உறுதிமொழி ஆகியவை குறித்து பயிற்சி அளித்தார்.

விளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறை அரசுச் செயலர் சுந்தரேசன் முகாமை பார்வையிட்டு, சாரண இயக்கத்தின் அவசியம் குறித்து வாழ்த்தி பேசினார். முகாமில் சாரண அதிகாரிகள் முருகையன், ராமு மற்றும் முன்னாள் மாநில பயிற்சி ஆணையர் சவுண்டப்பன், சுப்பிரமணி, கண்மணி மற்றும் பள்ளி ஆசிரியர்கள் மணிகண்டன், அனிதா தேவி, தேன்மொழி ஆகியோர் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை பள்ளியின் தலைமையாசிரியர் செந்தில்குமார் மற்றும் ஆசிரியர்கள் செய்திருந்தனர்.

Advertisement