வாலிபருக்கு கத்தி வெட்டு ஓட்டல் ஊழியர் மீது வழக்கு
புதுச்சேரி: வாலிபரை கத்தியால் வெட்டிய ஓட்டல் ஊழியர் மீது போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
உருளையன்பேட்டை, சஞ்சய் காந்தி நகரை சேர்ந்தவர் பிரபாகரன், 38; தனியார் ஓட்டலில் வேலை செய்து வருகிறார். இவரது தாய் பானுமதி, காமராஜர் சாலையில் உள்ள ஒரு ஓட்டலில் வேலை செய்து வருகிறார்.
தினமும் ஓட்டல் வேலை முடிந்து, தாய் பானுமதியை இரவு 11:00 மணிக்கு பிரபாகரன் சென்று அழைத்து வருவது வழக்கம். அதுபோல், கடந்த 2ம் தேதி இரவு தாய் பானுமதியை அழைத்து வர ஓட்டலுக்கு பிரபாகரன் சென்றுள்ளார். அப்போது, பிரபாகரனை அந்த ஓட்டலில் பணிபுரியும் மாஸ்டர் ஆறுமுகம் தகாத வார்த்தைகளால் திட்டியதாக கூறப்படுகிறது. இதனை பிரபாகரன் தட்டி கேட்டதால், இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.
இதில், கோபமடைந்த ஆறுமுகம் கையில் வைத்திருந்த கத்தியால், பிரபாகரனை வெட்டியுள்ளார். இதில், படுகாயமடைந்த பிரபாகரனை அருகிலிருந்தவர்கள் மீட்டு அரசு பொது மருத்துவமனையில் அனுமதித்தனர்.
இதுகுறித்து பிரபாகரன் அளித்த புகாரின் பேரில் உருளையன்பேட்டை போலீசார் ஆறுமுகம் மீது வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
மேலும்
-
சி.பி.ஐ., இயக்குநர் பிரவீனின் பதவிக்காலம் மேலும் ஒரு ஆண்டு நீட்டிக்கப்பட வாய்ப்பு
-
2 நாட்களில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.2,160 அதிகரிப்பு; வரலாறு காணாத உச்சம்!
-
பயங்கரவாதிகள் பதுக்கிய ஆயுதங்கள் கண்டெடுப்பு; பஞ்சாப் போலீஸ் தீவிர விசாரணை
-
பட்டுக்கோட்டையில் பெண் தலை துண்டித்து கொலை; மர்ம நபர்களை தேடும் போலீசார்
-
துருக்கி அதிபர் உதவியுடன் போரை முடிவுக்கு கொண்டு வருவேன்: அதிபர் டிரம்ப் சபதம்!
-
சுப்ரீம்கோர்ட் நீதிபதிகள் 21 பேரின் சொத்து விவரங்கள்: இணையத்தில் வெளியீடு