மழையால் 5 மணி நேரம் மின்சாரம் துண்டிப்பு

அரியாங்குப்பம்: தவளக்குப்பத்தில் இடியுடன் மழை பெய்ததால், 5 மணி நேரம் மின்சாரம் இல்லாமல் மக்கள் அவதியடைந்தனர்.

கடந்த சில நாட்களாக புதுச்சேரி பகுதியில் வெயிலின் தாக்கம் அதிகளவு காணப்பட்டது. இதனால் மக்கள் வெளியில் செல்ல முடியாமல் வீட்டிலேயே முடங்கினர். நேற்று முன்தினம் அக்னி நட்சத்திரம் துவங்கிய நிலையில் அன்றைய தினம் வெயில் 100 டிகிரியை தாண்டியது. இந்நிலையில், அக்னி நட்சத்திரம் துவங்கிய முதல் நாளிலேயே மாலையில் இருந்து இரவு வரை மழை பெய்தது. தவளக்குப்பம் பகுதியில், இடியுடன் கூடிய லேசான மழை நள்ளிரவு வரை பெய்தது. இரவு 8 மணி முதல் நள்ளிரவு 1 மணி வரை தவளக்குப்பம் பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. 5 மணி நேரம் மின்சாரம் இல்லாமல் பொது மக்கள் அவதிப்பட்டனர்.

Advertisement