மேக்ஸ் முல்லர் பள்ளி 100 சதவீத தேர்ச்சி

பெங்களூரு: எஸ்.எஸ்.எல்.சி., தேர்வில் மேக்ஸ் முல்லர் ஆங்கில உயர்நிலைப் பள்ளி மாணவர்கள் 100 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளனர்.

கர்நாடகாவில் கடந்த 2ம் தேதி எஸ்.எஸ்.எல்.சி., தேர்வு முடிவுகள் வெளியாகின. இந்த தேர்வில் பெங்களூரு மாகடி மெயின் ரோடு ஹெச்.வி.ஆர்., லே - அவுட்டில் உள்ள, மேக்ஸ் முல்லர் ஆங்கில உயர்நிலைப் பள்ளி மாணவர்கள், 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவி டி.எஸ். தீக் ஷா 98.24; எஸ்.ஸ்ரேயா 97.76; மாணவர் பி.அங்குஷ் 97.44 சதவீதம் மதிப்பெண்கள் எடுத்துள்ளனர்.

தவிர, 21 மாணவர்கள், 90 சதவீதத்திற்கு மேல் மதிப்பெண்கள் எடுத்துள்ளனர். 35 மாணவர்கள் டிஸ்டிங்ஷனிலும்; 76 மாணவர்கள் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

தேர்வில் வெற்றி பெற்ற அனைத்து மாணவ, மாணவியருக்கும் பள்ளியின் முதல்வர் ஜி.சுரேஷ் குமார் பாராட்டு தெரிவித்துள்ளார்.

Advertisement