ரவுடி நாகா மீதான வழக்கு தள்ளுபடி செய்தது ஐகோர்ட்
பெங்களூரு: போதை பொருள் கடத்தியதாக, ரவுடி வில்சன் கார்டன் நாகா மீது தொடரப்பட்ட வழக்கை கர்நாடக உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
பெங்களூரு, கோரமங்களாவில் 2021 செப்., 23ம் தேதி அப்பையா என்ற ராஜு என்பவரிடம் இருந்து என்.சி.பி., எனும் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினர், 12.20 கிலோ போதைப் பொருளை பறிமுதல் செய்தனர்.
அவரிடம் நடத்திய விசாரணையில், ரவுடி வில்சன் கார்டன் நாகா வழங்கியதாக தெரிவித்தார். இதையடுத்து, இருவர் மீது கோரமங்களா போலீஸ் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
தன் மீதான வழக்கை தள்ளுபடி செய்யக்கோரி கர்நாடக உயர் நீதிமன்றத்தில் ரவுடி நாகா மனுத் தாக்கல் செய்திருந்தார்.
இம்மனு மீது நீதிபதி நாகபிரசன்னா முன்னிலையில் விசாரணை நடந்து வந்தது. இருதரப்பு வக்கீல்களின் வாதங்களையும் கேட்டறிந்தார்.
பின், நீதிபதி பிறப்பித்த உத்தரவில், ''போதைப்பொருள் வைத்திருந்த நபர் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில், மனுதாரர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. அதை தவிர்த்து, மனுதாரருக்கு எதிராக விசாரணை அதிகாரிகள் வேறு எந்த ஆதாரங்களையும் சமர்ப்பிக்கவில்லை. எனவே, மனுதாரர் மீது தொடரப்பட்ட வழக்கு தள்ளுபடி செய்யப்படுகிறது,'' என்றார்.
மேலும்
-
சி.பி.ஐ., இயக்குநர் பிரவீனின் பதவிக்காலம் மேலும் ஒரு ஆண்டு நீட்டிக்கப்பட வாய்ப்பு
-
2 நாட்களில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.2,160 அதிகரிப்பு; வரலாறு காணாத உச்சம்!
-
பயங்கரவாதிகள் பதுக்கிய ஆயுதங்கள் கண்டெடுப்பு; பஞ்சாப் போலீஸ் தீவிர விசாரணை
-
பட்டுக்கோட்டையில் பெண் தலை துண்டித்து கொலை; மர்ம நபர்களை தேடும் போலீசார்
-
துருக்கி அதிபர் உதவியுடன் போரை முடிவுக்கு கொண்டு வருவேன்: அதிபர் டிரம்ப் சபதம்!
-
சுப்ரீம்கோர்ட் நீதிபதிகள் 21 பேரின் சொத்து விவரங்கள்: இணையத்தில் வெளியீடு